Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 12, 2011

ரஜினி வேடத்துக்கு சல்மான்கான் பொருந்துவாரா ? கோலிவுட் பரபரப்பு !?

ரஜினியின் சிறு வயது வாழ்க்கை பஸ் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வுகள், சினிமா பிரவேசம் திரையுலக வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தும் இப்படத்தில் தொகுக்கப்படுகிறது. இதில் ரஜினி வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சல்மான்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ரஜினி வேடத்துக்கு சல்மான்கான் பொருந்துவாரா? என்பதில் கோலிவுட்டிலும் பரபரப்பு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்தி திரையுலகில் சல்மான்கான் சூப்பர் ஸ்டாராக உள்ளார். வித்தியாசமான ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரஜினி வேடத்துக்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என்று இந்தி திரையுலகினர் கூறுகின்றனர்.

ஆனால் தமிழ் திரையுலகினர் ரஜினி வேடத்துக்கு சல்மான் பொருத்தமானவர் அல்ல என்கின்றனர். நடிகர் பிரசன்னா இதுகுறித்து கூறும்போது, ரஜினி வேடத்துக்கு இன்னொருவரை கற்பனை செய்ய முடியாது. தனது வாழ்க்கையை படமாக்க ரஜினி சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை.

இந்தியில் இப்படத்தை எடுப்பதாகவும் ரஜினி வேடத்தில் சல்மான்கான் நடக்கப் போவதாகவும் சொல்கிறார்கள். ரஜினி தென்னிந்திய நடிகர். சல்மான்கான் வடஇந்திய நடிகர். தென்னிந்திய நடிகர் வேடத்தில் வடஇந்தியர் நடிப்பதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!