Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 10, 2011

நுண்ணறிவு திறன் பாதிக்கின்ற நோய்! புதிய ஆய்வு !!

ஒரு மனிதனின் சிறந்த நுண்ணறிவுத் திறனுக்கு(ஐகி), அவரது கல்வியை விட, நல்ல ஆரோக்கியமே இன்றியமையாதது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்களின் மூளை இயங்குவதற்கு, அதிகளவிலான ஆற்றலை செலவழிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய் போன்ற வியாதிகள் தாக்கும்போது, இந்த ஆற்றல் பெருமளவில் உறிஞ்சப்பட்டு, நுண்ணறிவு மேம்பாடு தடைபெறுகிறது.

இந்த தொற்றுநோய்கள்தான், உலகின் பல்வேறு பகுதிகளில், மனிதனின் IQ வேறுபட்டிருப்பதற்கான காரணம். இது எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே IQ குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு மனிதன் தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு, வாழ்வதற்காக வேறிடம் சென்று குடியேறும்போது, புதிய சூழலை பழகிக்கொள்வதற்காக மூளையானது சிறப்பாக தயாராகிறது. இதனால், அத்தகைய மனிதர்களின் IQ அதிகமாக உள்ளன என்று பழைய கருத்தாக்கங்கள் தெரிவித்தன.

ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, அந்தப் பழைய கருத்தாக்கத்தை பொய்யாக்கி விட்டது. ஏனெனில், அமெரிக்காவில் ஒரே நிலையிலுள்ள பல மாநிலங்களில் IQ விகிதங்கள் மாறுபட்டு இருந்தன. IQ விகிதங்கள் குறைந்திருந்த மாநிலங்களில், தொற்றுநோய் பிரச்சினைகள் இருந்தன. IQ விகிதம் அதிகமிருந்த மாநிலங்களில் அந்த பிரச்சினைகள் இல்லை. மற்றபடி, அந்த மக்களுக்கும், மாநிலங்களுக்கும் வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதேசமயம், IQ சிக்கலானது, ஜீன் தொடர்புடையதாக இருந்தால், அதை மாற்றுவது கடினம் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!