சிலருக்கு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். இன்னும் சிலர் எவ்வளவுதான் உருண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் தவிப்பார்கள்.
நீங்களும் அந்த சூழ்நிலையில் உள்ளவரா? இன்றே சரியான டாக்டரைப் போய் பாருங்கள். இல்லையென்றால், உங்களது தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.
அமெரிக்க மருத்துவ அமைப்பின் சார்பில் சமீபத்தில் அங்கு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைவதும், அதனால் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து போவதும் தெரிய வந்தது.
மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவையும் தூக்கமின்மையால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலை நீடித்தால், உடலின் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்தது.
0 comments :
Post a Comment