Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 26, 2011

அதிக ஊனும் உறக்கமும் எடை மட்டுமல்ல இடையும் கூடும் !!

உலக அளவில் உடல் பருமனை அதிகரிக்கும் பொதுவான 2 விஷயங்கள் டி.வி.யும், நொறுக்குத் தீனியும் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. எண்ணெயில் பொரித்தெடுக்கும் உருளைக் கிழங்கு வறுவல் நாக்கை சுண்டியிழுக்கும் சுவை உடையதுதான்.

ஆனால் இதைச் சுவைப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல் சிறிதல்ல என்கிறது இந்த ஆய்வு. இதுபோன்ற எண்ணெய் உணவுகள் அதிகப்படியான கொழுப்பு சத்தை உடலில் சேர்த்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இப்படி சேரும் கொழுப்புகள் எளிதில் கரைவதில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளைஞர்களுக்கு நான்கு வருடத்தில் அதிகப்படியாக 1.5 கிலோ எடை அதிகரிக்கிறதாம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே பலமணி நேரம் வேலை பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது, சிகரெட் புகைப்பது, மதுபானம் அருந்துவது ஆகியவையும் உடலைப் பருமனாக்குகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

"உருளைக் கிழங்கு உணவுகளை வெகுவாக குறைத்துக் கொண்டு, காய்கறிகள், நவதானியங்கள், பழவகைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆறுமணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலும் அல்லது எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்குமாம். உடல் நலம் சீராக இருக்க சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனமா இருங்க என்கிறது ஆய்வு!

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!