Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 11, 2011

போலிஸ் உதவியுடன் நடந்த சினிமா தயாரிப்பாளர்கள் கூட்டம் !

சென்னை, செப். 11 : தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் விலகியதையடுத்து பொறுப்பு தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சங்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று ஒரு பிரிவினர் வற்புறுத்தினர். இதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சங்கத்தில் தவறுகள் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக ஏற்கனவே இரு பிரிவினருக்கும் மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிலிம் சேம்பரில் பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடு நடந்தது. ஆனால் அரங்கு சிறியதாக இருப்பதாகவும், போதிய இட வசதி இல்லாததாலும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்ததால் அக் கூட்டம் ரத்தானது.

பின்னர் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூடி அக் டோபர் 9-ந் தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதனை தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். தேர்தல் அதி காரியை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சில பிரச்சினை குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று காலை நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை தாங்கினார்.

கே.ஆர்.ஜி., கே.முரளீதரன், அன்பாலயா பிரபாகரன், காஜாமொய்தீன், கதிரேசன், சத்யஜோதி தியாகராஜன், இபுராகிம் ராவுத்தர், ஏ.எஸ்.அழகப்பன், கலைப்புலி தாணு, கே.ஆர்., தேனப்பன், கலைப்புலி சேகரன், தங்கர் பச்சான், ஆர்.பி.சவுத்திரி, சக்தி.சிதம்பரம். நடிகர்கள் கருணாஸ், சரவணன், மன்சூர் அலிகான், பாபுகணேஷ், மற்றும் திருமலை, பவுத்திரன், இயக்குனர் சேகர், சவுந்தர் கேசவன், பட்டியல் சேகர், கபார், ஜெயதேவி, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. சிலர் கணக்கு விவரங்களை கேட்டனர். முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், ரகளையும் ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்கும் படி எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே பேசிக் கொண்டிருந்தனர். இதனால் கூச்சல், அமளி நீடித்தது. மோதலை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டனர். தொடர்ந்து விவாதம் நடந்தது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!