பெங்களூர்,செப்.12 : முன்னாள் முதல்வர் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது சிவில் காண்ட்ராக்ட் கொடுத்தது சரியே என்று கீழ் கோர்ட்டு தீர்ப்பு அளித்த விபரத்தை அளிக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பா.ஜ. தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது தொடரப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மாநில ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணை நேற்றும் நடைபெற்றது. அப்போது எடியூரப்பா சார்பாக வழக்கறிஞர் எல். நாராயணசாமி ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது சிவில் காண்ட்ராக்ட் விடுத்தது சட்டப்பூர்வமானதுதான் என்று டிவிஷன் பெஞ்ச் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்றும் அது தொடர்பான விபரத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.
இதனையொட்டி அடுத்த விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர்களுக்கு பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் (பொது சொத்துக்களை அபகரித்தது, முதல்வர் பெயரை உபயோகித்து லஞ்சம் பெற்றது) லஞ்ச பணத்தின் மூலம் வாங்கப்பட்டது என்றும் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது மேல் அப்பரா நீர்பாசன இரண்டாவது திட்டப்பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக காண்ட்ராக் விடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ.13 கோடி லஞ்சமாக கிடைத்தது என்றும் அதை வைத்துத்தான் எடியூரப்பாவின் மகன்களும், மருமகனும் பண்ணைகளை வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டி மதசார்பற்ற ஜனதாதளத்தின் எம்.எல்.சி.யும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஒய்.எய்.வி தத்தா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா ரிட்மனு தாக்கல் செய்துள்ளார். எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீசாரும் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment