Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 5, 2011

விஷாலுடன் இணையும் பிரபு தேவாவின் வெடி வெடிக்குமா?

"வெடி" படத்தின் ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, விஷால் இருவரிடமும் பர்ஸனல் கேள்விகள் வேண்டாம், படத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரஸ்மீட் ஆரம்பமானது.

இயக்குநர் பிரபுதேவா ஆஹா, ஓ‌ஹோ, அப்படி, இப்படி... என்று "வெடி" படத்தை பற்றி வெடித்து முடித்ததும், நிருபர்கள் சிலர் "வெடி" பற்றி ஏதேதோ கேள்வி கேட்க, எங்களுக்கா நிபந்தனை...? என வித்தியாசமாக வெடித்தெழுந்த நிருபர் ஒருவர், பிரபுதேவா, உங்கள் வாழ்க்கையில் வெடித்த விஷயங்கள்தான் "வெடி" படமா...? என வில்லங்கமான கேள்வியை போட, டென்ஷனான பிரபுதேவா, அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், நீங்க எதை கேட்கறீங்க...? என்ன கேட்கறீங்க...? என வினாவினார்.

நிருபரும் விடாமல் இல்ல, பொதுவாக இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, தங்களது படங்களில் காட்சிப்படுத்துவார்கள். நீங்களும் அப்படி சின்ன வயதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் வெடித்த விஷயங்களை, வெடி படத்தில் பயன்படுத்தினீர்களா...? என கேட்கிறோம் என விளக்கம் கொடுக்க, உஷாரான பிரபுதேவா, நான் "போக்கிரி" படத்தில் அண்டர் க்ரவுண்ட் தாதாக்களின் வாழ்க்கையை படமாக்கினேன். அதற்காக நான் அது மாதிரி தாதாவாக வாழ்ந்தேனா என்ன...? அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று எஸ்கேப் ஆனார்.

கூடவே இது தெலுங்கில் ஹிட் ஆன "சவுரியம்" படத்தின் தமிழ் ரீ-மேக், இதில் விஷால் பிரபாகரன் எனும் பாத்திரத்தில் நடிப்பதால், ஆரம்பத்தில் இந்தபடத்திற்கு பிரபாகரன் என பெயர் சூட்டினோம். அதன்பின் சில பிரச்சனைகளால் "வெடி" என்று மாற்றிவிட்டோம் என்று சிரித்தவரிடம், நிருபர் ஒருவர், இந்தபடம் நிலமோசடி தொடர்பான கதையா...? என கேட்க, அதற்கு பிரபுதேவா, நான் தான் முன்னரே இது தெலுங்கு "சவுரியம்" படத்தின் ரீ-மேக் என்று சொன்னேனே. அதில் நிலமோசடியும் ஒரு சில இடங்களில் வரும். அது தமிழிழும் வருகிறது அவ்வளவே என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!