Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 15, 2011

முள்வேலி முகாம்களில் தவிக்கும் தாயக தமிழர்கள் !?

கொழும்பு, செப். 15 : போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இலங்கை ராணுவ முகாம்களில் எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் 2 லட்சம் தமிழர்கள் தவிக்கின்றனர்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகதிகள் முகாம்கள் என அழைக்கப்படும் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

போர் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் மறு குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களில் மிக சிலர்தான் மறு குடியமர்த்தப்பட்டுள்ள னர். பெரும்பாலானவர்கள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு சுமார் 2 லட்சம் தமிழர்கள் தவிப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இறுதி கட்ட போர் முடிந்து 2 ஆண்டுகளாகியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்கியிருந்த 2 லட்சம் தமிழர்கள் இன்னும் ராணுவ முகாம்களிலேயே அடைபட்டு கிடைக்கின்றனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் யாழ்ப்பாணத் தில் உள்ள வலிகாமம், திரிகோணமலையில் உள்ள சாம்பூர் மற்றும் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள். முகாம்களில் இருந்து அனுப்பபட்டவர்களில் சிலர் வாழ்வதற்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது சட்டத்துக்கு புறம்பானது. முல்லைத் தீவு மற்றும் வடமராச்சி பகுதியில் உள்ள இந்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அங்கு பல அவமதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*அரசும், ஆட்சியாளர்களும் ஓட்டுவங்கிகள் மட்டுமே இவர்களை நம்புவது வீண், நாம் நம் உறவுக்காக ஒன்றுபட்டு ஒரு அணியாக குரல்கொடுப்போம் வாருங்கள் தமிழராக இருப்பின்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!