புதுடில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்டில் நடந்துவருகிறது., இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் பெங்களூர் கோர்ட் இதனை ஏற்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் ஜெ., மனு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமாக இருக்கும் செயலாக இருக்கும் என கோர்ட் கருதுகிறது . விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.,இல்லையேல் வாரன்ட் பிரபிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
மேலும் அவர் ஆஜராகும் தேதியை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அவர் கூறும் நாளில் விசாரிக்க நாங்கள் நீதிமன்றத்திற்கு ஆணையிடுகிறோம். பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருக்கிறது என்று கூறினால் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய ஆணை பிறப்பிக்கின்றோம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
*இன்னும் ஐந்து ஆண்டுகளில் முடிந்த அளவுக்கு களவாங்குவார் இந்த களவானி முதல்வர்.
2 comments :
மஹாராணி என்று நினைப்பு ! மைசூர் மஹாராஜா இன்னும் இருக்கிறாரா என்ன?
இவரால் எவ்வளவு பொதுப்பணம் நீதி மன்றத்தில் செலவிடப் பட்டுள்ளது என்று கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். 125 முறைகளுக்கும் மேலே தில்லு முல்லு அதற்கு வக்கீல்கள், மானங்கெட்ட அரசு கடைசியில் மானம் இழக்கும் மஹாராணி. மெகா சீரியல் எடுக்கலாம்.
This lady never go court but shoot in jail
Post a Comment