Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 26, 2011

பயங்கரவாதிகள் பாம்ப் தயாரித்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது திக்விஜய் சிங்

புதுடெல்லி : ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தை எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!