கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, படம் எடுத்தால், தியேட்டரில் 15 நாட்கள் ஓடினால் போதும், கணிசமான பணம் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில், "ஏடா கூட தலைப்புகளுடன் கவர்ச்சிப் படங்கள் எடுக்க களமிறங்கியுள்ளனர்.
கணவனின் தம்பியை விரும்பும், அண்ணியை மையமாக வைத்து கடந்த வருடம், "உயிர் படமும், மாமனாரை விரும்பும் மருமகளை மையமாக வைத்து, "சிந்து சமவெளி, படமும், இளம்பெண்ணை பலான நோக்கத்தில் இம்சிக்கும், "மிருகம் படங்களும் வந்தன. இப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும், தயாரிப்பாளர்களை நஷ்டப்படாமல் காப்பாற்றி விட்டது என்று கோலிவுட்டில் அப்போது பேசப்பட்டது. ஆனாலும், இடையில் சில மாதங்கள் கவர்ச்சிபடங்கள் ஏதும் வெளிவரவில்லை.
தற்போது, நடிகைகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், "சாந்தி அப்புறம் நித்யா, இளமை காதல், அரங்கேற்ற நாள், ஒரு சந்திப்பில், அநாகரிகம் படமும், பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ஜெயபாரதி நடித்த, "ரதிநிர்வேதம் படம், தற்போது, ஸ்வேதா மேனன் நடிப்பில் மீண்டும் மலையாளத்திலும், தமிழிலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்படங்களின் சுவர் விளம்பரங்களில், அரை குறை ஆடைகளுடன் நடிகைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. போலீசாரின் நெருக்கடியை மீறி, சென்னையில் பல இடங்களில் இப்படங்களின் ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பத்திரிகைகளிலும் கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் இப்படிப்பட்ட படங்களை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது, என்று விசாரித்த போது, "சென்சாருக்கு வரும் படங்களில், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இருந்தால் தயவு, தாட்சண்யமின்றி வெட்டி விடுவோம். இப்படிப்பட்ட, பல படங்கள் மற்ற மாநிலங்களில் சென்சார் செய்யப்பட்டு வந்து விடுகின்றன. இதனால், படம் வெளியாகும் வரை, இப்படங்கள் குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுப்பதற்காக இப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள், நடிகைகளின்,"கவர்ச்சி படங்களை போட்டு, விளம்பரம் செய்யும் நிலையும் உள்ளது. (இதில் சென்சார் போர்ட் வேறு) அரசும், போலீசாரும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 comments :
உங்க பாயிண்ட் சரிதான்.
என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.
sariyaa sonneengka... vaalththukkal
மிருகம் முகச்சிறந்த கருத்தை தாங்கிவந்த படம். ஆனால் விளக்கம் குறைந்தவர்களால் பிழையாக விளங்கப்பட்டு அதன் உண்மை நோக்கம் வெளிவராமல் போய்விட்டது.
Post a Comment