கிளிநொச்சி, ஜூலை. 25 இலங்கையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. இலங்கை முழுவதும் உள்ள 65 கவுன்சில்களுக்கு நடந்த தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் உள்ள 26 கவுன்சில்களில் 18 கவுன் சில்களை தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியது. இது விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற கட்சியாகும்.
இந்த நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பு விழா கிளிநொச்சியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ளது. அப்போது, அம்பாறை, திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்ட உள்ளாட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த தகவலை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின், பதவி ஏற்பு விழா திரிகோண மலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment