சிட்னி, ஜூலை.8 ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் வசித்தவர் நடாலிஉட். 80 வயதை தாண்டிய இந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் அருகில் உள்ள ஊரில் வசித்து வருகிறார். அவர் எப்போதாவது வந்து நடாலி உட்டை பார்த்து செல்வார். சில வருடமாக உறவினர் அவரை பார்க்க வரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து, இவருக்கான பென்சன் தொகை டெலிவரி ஆகாமல் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிச் சென்றுள்ளது. மின் கட்டணம் கட்டாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த வீடு இருளில் கிடந்தது. நடாலிஉட் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று, பக்கத்து வீட்டுக்காரர்கள் கருதினர்.
நடாலி உட்டின் உறவினர் 8 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் அங்கு வந்தார். அப்போது நடாலியின் படுக்கை அறையில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து எலும்பு கூடுகளையும், மண்டை ஓட்டையும் சேகரித்து, ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர்.
இதில் இறந்தவர் நடாலிதான் என்றும், இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளாக பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரி யாமல் அண்டை வீட்டார் இருந்துள்ளனர்.
0 comments :
Post a Comment