நடந்த முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைய வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அ.தி.மு.க. அணி வெற்றி பெற கடுமையாக உழைத்தீர்கள்.அ.தி.மு.க. அணி அமோகமாக வெற்றி பெற்றது. விஜய் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதியதாக ஓட்டுப்போட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்தினர் விஜய் ரசிகர்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது. விஜய் எனக்கு பிள்ளை. நீங்கள் கொடுத்த உற்சாகத்தில் தான் விஜய் இளைய தளபதியாகி உள்ளார். அவர் பெயரை வைத்து நீங்கள் வளரவேண்டும். மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தங்கள் பகுதியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் நீங்கள் தேர்தலில் நிற்க நான் சீட் வாங்கி தருவேன்.
மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் அரசியல் மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு வந்து அடிப்பார்கள், அந்த அளவுக்கு மக்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
விஜய் இதுவரை 50 படத்தில் நடித்துவிட்டார். இன்னும் 25 படங்களிலாவது அவர் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அதனால் அவர் முழு நேர நடிகராக இருப்பார். நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். நான் நேரிடையாக ஈடுபட்டு உங்களுக்கு பலமாக இருப்பேன். இன்று முதல் இளைஞர் அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், விஜய் நற்பணி இயக்க மாவட் தலைவராகவும், நற்பணி இயக்க மாவட் தலைவர் நந்தகுமார் இளைஞர் அணி தலைவராகவும் நியமிக்கப்படுகின்றனர்., இவ்வாறு அவர் பேசினார்.
2 comments :
முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
வாழ்த்துக்கள் நண்பரே...
Post a Comment