Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 31, 2011

தன்னை மறந்து தத்தளிக்கும் நவோமி! 17 வருட மறதி!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.

கடந்த 1992-ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது. அவரது மகன் அம்மா என்று அழைத்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை ஒரு சிறுமி போன்று பாவித்தார். எனவே, அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஞாபக மறதி நோய் பாதிக்கும் முன்பு அவர் மன நலம் குறித்த கல்வி படித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த ஞாபக மறதி வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

3 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது இவருக்கு ஓரளவு பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்துள்ளன. ஞாபக மறதியால் தான் பட்ட கஷ்டங்களை அவர் புத்தகமாக எழுதியுள்ளார். தனது நோய் முற்றிலும் குணமடைந்தததும் முகத்தை கண்ணாடியில் பார்த்ததாகவும் அப்போது சுருக்கமடைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் தான் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது மகன் தன்னை அம்மா என்று அழைத்த போதுதான் தனது நிலையை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!