Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, July 21, 2011

மண்ணை கவ்விய ஜெயா? மகிழ்ச்சியில் மார்தட்டிய கலைஞர் !?

சமச்சீர் கல்வியை இந்தாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான பொது பாடப்புத்தகங்களை ஜுலை 22க்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தமிழக மாணவர்களுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எல்லோராலும் வரவேற்கப்பட்ட தீர்ப்பு அது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்த விரும்பாமல் அத்தீர்ப்புக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு.

ஏற்கனவே ஓன்னரை மாத காலமாக புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பிடிவாதப் போக்கினால், குழப்பமான சூழல் உருவானது. பெற்றோர்கள், மாணவர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளர்.

ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜூன் 21 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தும், சமச்சீர் பாடப்புத்தகங்கள் ஆகஸ்ட் 2க்குள் வழங்கப்படவேண்டும் என கால நீடிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப ஆகளிட் 2 க்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் பாடப்புத்தகங்களை அனுப்பிவைத்திட வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களை நடத்துவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும்.

இந்நிலையில் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!