Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 20, 2011

தமிழின "கொலை" காரனை புறக்கணித்த சினிமா பாடகர்கள் !!

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

மேலும் இலங்கை சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் இலங்கை நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு கூட இஃபா விருது நிகழ்ச்சியை அமிதாப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் புறக்கணித்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் கிளிநொச்சியில் ஸ்டேடியம் ஒன்று திறப்பு விழாவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்க இருக்கிறார். இதனால் மனோ உள்ளிட்ட பாடகர்கள் மூவருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டனர் மூன்று பாடகர்களும்.

இதுகுறித்து கொழும்பில் இருந்து மனோ வெளிட்டுள்ள செய்தியில், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு, தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்பது எங்களுக்கு தெரிந்தது. இதனால் நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்தோம்.

தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

1 comments :

very good
they should not gone even to Colombo

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!