தமிழ்நாடு அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.
இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது.
இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கலைஞர் குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான்.
ஆகவே தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 comments :
இன்னிக்குத்தான் மப்பு தெளிஞ்சுதா? ஏண்டா நாதாரி நீயெல்லாம் ஒரு ஆளு உனக்கு ஒரு எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு கேடா? வாட் வரி உயர்வை எதிர்த்து அரசை கண்டிக்கலை நீ, புதிதாக 300 மதுக்கடை திறக்க அரசு அனுமதி வழங்கியிருக்கு அதை நீ எதிர்க்கலை, இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் 1800 கோடி வரிச்சுமை தமிழக மக்கள் தலையில் கூடுதலாக சுமத்தியிருக்கிரர்கள் அதை நீ தடுக்கலை, அப்புறம் என்ன மயி....கு உனக்கு எதிர் கட்சி தலைவர் பதவி
இவ்வளவு நாள் என்ன செய்தார்.கழுதை-குதிரைக்கு எட்டு வித்தியாசங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாரா?
இவரும் ஒரு கல்வி வியாபாரி.சமச்சீருக்கு எப்படி ஆதரவு தருவார்.அது போகட்டும் எதிர் கட்சித் தலைவரான இவர் 39000கோடி வரியை அம்மையார் பட்ஜெட்டுக்கு முன் இரவோடு இரவாக ஏற்றியதே எதிர் கட்சித்தலைவர் வாயைட் திறக்கவே இல்லையே?என்ன செய்து கொண்டிருந்தார்.கோழி முட்டைக்கு -------- கொண்டிருந்தாரா?இவரெல்லாம் சட்டமன்றத்திற்கு வெறும் சுமை.
ஏட்டு சுரக்கா கறிக்கு உதவாது...
Post a Comment