Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 20, 2011

மனைவி என்கிற துணைவி ( நண்பி )

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி

சலவையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையும் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகள் போக்கிடுவாள் அன்பை ஈந்து

இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாள்தோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்.

1 comments :

மனைவி என்பவள் என்றுமே நண்பியாகவே இருக்கவேண்டும்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!