சென்னை,ஜூலை.2 - முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உண்மைக்கு மாறான பொய் செய்திகளை பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பென்னி குயிக் கட்டிய அணையை சேதப்படுத்த முயன்றாலோ, கேரளத்துக்கு செல்கின்ற அனைத்து பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். புதிய அணையை கேரள அரசு அமைக்குமானால் பள்ளத்தில் அமையப் போகும் அந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய் விடும்.
சுப்ரீம் கோர்ட் அமைத்த 2 நிபுணர் குழுக்களும் முல்லைப் பெரியாறு அமை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால் கேரள அரசின் அக்கிரமமான போக்கை தடுத்தாக வேண்டும். கேரள அரசு தமிழகத்துக்கு விரோதமாக செயல்பட முனைந்தால் ம.தி.மு.க. நேரடியாக கிளர்ச்சியில் ஈடுபடும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment