துபாய் : உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9-வது இடத்தில் துபாய் உள்ளது., இது குறித்து சிபி ரிச்சர்ட் எல்லிஸ் நடத்திய ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவது.
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபாயில் செயல்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் நேற்று பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் உலகளவில் அலுவலகம் அமைத்து செயல்படும் 280 முன்னணி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 101 நாடுகளில் 232 நகரங்களில் ஆய்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் துபாய் 9-வது இடம் பிடித்தது. முதல் இடத்தில் ஹாங்காங் ( 68.2 சதவீதம்) இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் (67.5 சதவீதம்), டோக்கியோவுக்கு (63..9), லண்டன் (63.2) , ஷாங்காய் 61.4 சதவீத வர்த்தக நிறுவனங்களின் தேர்வாக உள்ளது. மேலும் துபாய் நகரமானது தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் 7-வது இடத்தில் உள்ளது . கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் நகரமாக துபாய் மாறி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1 comments :
எமது நாடுகள் எப்போது இவ் இடத்துக்கு வரப்போகின்றன?
Post a Comment