Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 2, 2011

பள்ளி குழந்தைகளை பாழாக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓர் அதிர்ச்சி !

பல்லடம்: பள்ளி மாணவ, மாணவியரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்த பா.ம.க.,வினரை, பல்லடம் போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியரை அவசரம், அவசரமாக பள்ளிக்கு வேன், காரில் ஏற்றிச் சென்றனர்.

"சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகம் வசூலிப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ம.க., வினர் அறிவித்திருந்தனர். நேற்று காலை 9.30 மணிக்கே போலீசார் தாலுகா அலுவலகம் முன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10.05 மணிக்கு பல்லடம் நகர பா.ம.க., செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் புரு÷ஷாத்தமன் உட்பட 30 பேர் கட்சிக் கொடிகளுடன், தாலுகா அலுவலகம் முன் திரண்டனர். அப்போது, ஒரு வேனில் இருந்த பள்ளி மாணவ, மாணவியர் சிலரை இறக்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தனர். இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பா.ம.க., வினரை அழைத்த இன்ஸ்பெக்டர், "யாரைக்கேட்டு பள்ளிக் குழந்தைகளை ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள். குழந்தைகளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தது அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியுமா? அவர்களின் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியுமா? இது தவறான நடைமுறை. உடனடியாக, பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புங்கள்,' என எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து ஒரு வேனிலும், காரிலும் மாணவ, மாணவியர் அவசரம், அவசரமாக ஏற்றப்பட்டு, அவர்கள் படிக்கும் பல்லடம் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்பே பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க., மாநில துணை பொது செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

1 comments :

தமிழ்நாடே குட்டு வைத்தும்
இவர்கள் இன்னும் திருந்தவில்லையா ?

அரசியல்வாதிகள் திருந்தவேமாட்டார்களா ?

ம்ம்...

http://sivaayasivaa.blogspot.com

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!