லண்டன் : பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் ஏழு பெண்களுக்கு எச்.ஐ.வி. கிருமியை பரப்பியதாக எழுந்த புகாரின் பேரி்ல் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நிக்கோஸிநாடி மபான்டா (44) என்பவர் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்று லண்டன் வந்திருந்தார். இங்கிலாந்து சில சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே எச்.ஐ.வி. கிருமி தொற்றியிருப்பதை மறைந்து ஏழு பெண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நிக்கோஸிநாடியின் செல்போனில் ,அவருடன் நெருங்கி பழகிய ஒரு பெண், அனுபபிய எஸ்.எம்.எஸ் ஒன்றில் உனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. உடனடியாக பரிசோதனை செய்து கொள் என அனுப்பியதன் மூலம் தெரியவந்தது.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் நிக்கோஸிநாடியை போலீசார் கைது செய்து வொல்வோர்ஹாம்டன் கோர்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டது. மேலும் இவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் மற்ற பெண்களை கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
1 comments :
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
Post a Comment