Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 17, 2011

குடும்பம் செழிக்க பெண் கல்வி முக்கியமான ஒன்று

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும், என கலெக்டர் மதிவாணன் பேசினார்.

மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி பேசுகையில், "மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்; வீட்டுக்கு ஒரு குழந்தை அவசியம்; இரண்டாவது குழந்தை ஆடம்பரம்; மூன்றாவது குழந்தை ஆபத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிசு கொலையை தடுக்க வேண்டும்" என்றார்.

கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும், பெண்கள் இருப்பார்கள் என்பது மாறி, தமிழக முதல்வரில் துவங்கி, அனைத்து இடங்களிலும் பெண்களே முன்னணி யில் உள்ளனர்.

கலங்கரை விளக்கை போன்றவர்கள் பெண்கள். அவ்விளக்கு வெளிச்சம் தரும் அளவுக்கு, குடும்பம் பிரகாசிக்கும். குடும்பம் முன்னேறினால், கிராமம் முன்னேறும்; கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும், என்றார்.

1 comments :

ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...

பெண்ணிற்க்கு கல்வி அறிவு இல்லாமல் போனால் ஆவதோ அல்லது அழிவதோ ஏற்படலாம்.....

முறையான் கல்வி அறிவு உண்டானால் ஆக்கம் மட்டுமே...
எனவே பெண் கல்வி மிகமிக அவசியமே..

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!