Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 31, 2011

ஒரு அணி தலைவனாக இருக்கலாம் அதற்காக இப்படியா!?

‘ராஞ்சி’ என்ற ஒரு ஊர் இருப்பதே, தோனி இந்தியாவின் கேப்டனான பிறகு தான் பலருக்கு தெரியும். அண்மையில் உலக கோப்பையை வென்ற கையோடு அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள புறப்பட்டதும் ராஞ்சிக்கு தான்.

இன்று ராஞ்சியிலிருந்து தான் அவருக்கு அதிகமான வாக்குகளும் சென்று கொண்டிருக்கின்றன. எதற்கு என்கிறீர்களா? ஐசிசியின் மக்கள் தெரிவு விருதுக்காகத்தான்.

மொத்த ஊருமே தோனிக்கு தான் வாக்கு போட்டிருக்கிறது. கடந்த வருடம் சச்சின் டெண்டுல்கர் தெரிவானார். இம்முறை எப்படியும் தோனியை ஜெயிக்க வைக்கிறோம் என்கிறார்கள் சபதம் போட்டு.

உலக கோப்பை, டுவெண்டி 20 என அடுத்தடுத்து தோனியின் தலைமைத்துவத்திலான இந்திய அணி தான் வெற்றி பெற்றிருகின்றது. இதற்கு நன்றிக்கடனாக எப்படியும் தோனியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இம்முறை ஐசிசியின் மக்கள் தெரிவு விருதுக்காக தோனியுடன், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககார, இங்கிலாந்தின் ஜோனதான் ட்ரோட், தென் ஆபிரிக்காவின் ஹசிம் அம்லா, மேற்கு இந்தியாவின் கிரிஸ் கேய்ல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

www.lgpeopleschoice.com என்ற முகவரிக்கு சென்று உங்கள் விருப்ப நாயகனை தெரிவு செய்யுங்கள். வாக்களிக்கும் இறுதி திகதி ஆகஸ்ட் 25., முடிவுகள் செப்டெம்பர் 12 ஐசிசியால் வெளியிடப்படவிருக்கிறது.

* இதற்க்கு முன்பு கங்குலியையும் இப்படித்தான் முன் நிருத்தினார்கள் பின்பு ஒரு முறை தோற்ததும் தூக்கி எரிந்தவர்கள்தான் இந்த ரசிகர்கள் உஷார் *

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!