Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 23, 2011

எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த இந்திய பெண்!!

பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?

இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இந்த வருடம், மே 11ம் தேதி, ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் வயதான பெண் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது ஏற்பட்ட சோதனைகள் ஏகப்பட்டவை. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக அடிவாரத்தில் குழுமிய போது, இவரது குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், இவரை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். ஒரு சிலர், "ஏன் இந்த வீண் முயற்சி; பேசாமல் இப்படியே திரும்பி விடுங்கள்...' என்று சொல்லி, எச்சரித்துள்ளனர். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் ஒரு கட்டத்திற்கு மேல் ஏற முடியாமல் திரும்பி விட்டனர். 23 ஆயிரம் அடிக்கு மேல் காற்று கிடையாது, செயற்கை சுவாசம்தான் துணை. இந்த செயற்கை சுவாசத்தின் துணையோடு, மேலும் 6,000 அடி ஏற வேண்டும்.

இன்னும் கொஞ்சம் உயரம் போனதும் மைனஸ், 100 - 150 டிகிரி வரை குளிர் காணப்படும். இவர் போன போது, உச்சபட்ச குளிர் நிலவியது., இன்னும் கொஞ்ச தூரத்தில் சிகரத்தை தொடப் போகிறோம் என்ற நிலையில், கையில் இருந்த கையுறை கழண்டு விழுந்து, காணாமல் போனது. எலும்பையே உருக்கும் குளிருக்கு முன், விரல்கள் எம்மாத்திரம் என்ற நிலையில், திரும்ப கையுறை கிடைக்கப் பெற்றார்.

இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு திரும்பி இருக்கிறார்., இவர், நாற்பது நாள், ஒட்டகத்திலேயே பாலைவனப் பயணம் மேற்கொண்டு, "லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவரது பொழுதுபோக்கே மலை ஏறுவதுதான், எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேற, நிறைய செலவு செய்ய வேண்டும். பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சாதாரண குடும்பத் தலைவியான இவருக்காக, செலவு செய்ய இப்போதுதான், டாடா ஸ்டீல் நிறுவனம் முன் வந்தது. இதையடுத்து, இப்போது அவரது கனவு நனவாகியுள்ளது., சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ள இவர், இப்போது சாதனைப் பெண் மட்டுமல்ல, எவரெஸ்ட் சிகரத்தின் சரித்திரத்திலும் இடம் பெற்ற பெண்ணாகி விட்டார்.

இமயமலையில், 29 ஆயிரத்து, 28 அடி உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். *சாதனை செய்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம், இந்த சிகரத்தை தொடுவதுதான். *இந்த சாகச பயணத்தில் இதுவரை, 216 பேர் உயிரிழந்துள்ளனர்., மே 29, 1953ல் தான், முதன் முதலாக டென்சிங் மற்றும் ஹிலாரி ஆகியோர் இந்த சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!