Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 3, 2011

தி மு க, குடும்ப அரசியல் கட்சியா? விளக்கம் தரும் அழகிரி!?

மதுரை முன்னாள் துணைமேயரும், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா.எம்.பாண்டியன்- பாண்டி செல்வி தம்பதியரின் மகள் பா.பாண்டிராணிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்- கிரகலெட்சுமி தம்பதியரின் மகன் தங்க அரவிந்த்துக்கும் இன்று காலை மதுரை சத்திய சாய் நகரில் உள்ள தயா மகாலில் திருமணம் நடந்தது.

திருமணத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தி வைத்தார்., விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்திற்குதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

எனது கட்சிக்காரர்களுக்குதான் நிறைய உதவிகள் செய்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் தோல்வி என்றதும் மாற்றுக்கட்சிகாரர்களை விட நமது கட்சிக்காரர்கள் (தி.மு.க.) குடும்ப அரசியல் செய்வதாக விமர்சனம் செய்கிறார்கள்.

இது எனது மனதுக்கு வேதனை அளிக்கிறது. நமது கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினர் பெயரையோ படத்தையோ இனி போட வேண்டாம்., அப்படி போட நினைத்தால் பேரறிஞர் அண்ணா படம், தலைவர் கருணாநிதி ஆகியோரின் பெயர் படத்தை மட்டும் போட்டால் போதும். மனப்பூர்வமாக என் படத்தையோ என் பெயரையோ போட நினைத்தால் மட்டும் போடுங்கள்.

என் குடும்பத்தினரின் படத்தையோ பெயரையோ போடவேண்டாம். அவ்வாறு செய்தால் அண்ணாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’’என்று பேசினார்.

Reactions:

1 comments :

தோல்வி விரக்தியிலே ஏதோ உளறுகிறான் ரௌடி. போடா போடா. இனிமேல் நீ கட்சிய என்ன தான் வளர்த்தாலும் உங்களுக்கு வோட்டு போட நாங்க தயாரா இல்ல. மதுரைக்கு என்ன நல்லது பண்ண? உங்கள மதுரை மக்கள் கொண்டாடறதுக்கு? அஞ்சு வருஷம் நில அபகரிப்பு. கட்ட பஞ்சாயத்து.. கொலை.. இது தாண்டா நீ பண்ண சாதனை.. கொலை பன்னதுக்கெல்லாம் நாங்க சாதனையா நனைக்க மாட்டோம்.. போடா அழகிரி நாயே. தினகரன் அலுவலகத்துல மூன்று பெற சாகடிச்சையேடா. அவங்க குடும்பம் எவ்ளோ அழுதுருப்பாங்க.. நீங்க திருடி கொள்ளை அடிச்சு கொலை பண்றதுக்கு நாங்க திமுகாவிற்கு வோட்டு போடணுமா? திமுக என்கிற கட்சியே 2011 சட்டமன்ற தேர்தலோட அழிந்து விட்டது.. ஜெயலலிதாவிற்கு மாற்று கட்சி இனி தேமுதிக தான். ஒரு வேலை ஜெயலலிதா ஆட்சி பிடிக்கவில்லை என்றாலும். திமுக (மீண்டு)ம் வருவதுக்கு வாய்ப்பே இல்லை. விஜயகாந்த் தான் வருவார். திமுக ஒழிக

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!