சென்னை : போலி ஆவணங்கள் கொடுத்து, அமெரிக்க விசா பெற விண்ணப்பித்த, இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத், மல்காஜ்கிரியைச் சேர்ந்தவர் தயானந்த், 32. குஜராத், மைசாலா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மிஸ்தா, 20. இவர்கள் இருவரும், அமெரிக்கா செல்வதற்காக மும்பையை சேர்ந்த ஜான்கிர் என்ற ஏஜன்ட்டை அணுகினர். அப்போது, தயானந்த், தர்மிஸ்தாவை தன் மனைவி என்று கூறி விண்ணப்பித்தால், உடனடியாக விசா கிடைக்கும் என்று ஜான்கிர் கூறினார்.
இதையடுத்து, இருவரும் கணவன், மனைவி என்பதற்காகன போலி ஆவணங்களை தயாரித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில், விசாவிற்காக விண்ணப்பித்தனர். தூதரக அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. அமெரிக்க தூதரக உதவி மண்டல பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரி கெல்லி பார்ட்டின் அளித்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீசார் தயானந்த் மற்றும் தர்மிஸ்தாவை கைது செய்தனர்.
அதே போல், நேற்று முன்தினம் மாலை 3:20 மணிக்கு கோவையில் நர்சாக பணியாற்றும் டாடாபேடு, ஹட்கோ காலனியைச் சேர்ந்த, ராசேல் மங்களம் செனார், 53, என்பவர், தன்னை ஆசிரியர் எனக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றார். அவர் மீது தூதரக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீசார், அவரையும் கைது செய்தனர்.
0 comments :
Post a Comment