Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 18, 2011

இவர் அதுக்கு சரிபட்டு வருவாரா ....!?

சென்னை, ஜூலை 18: பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

சமச்சீர் கல்விக்கானப் புத்தகங்களை ஜூலை 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான திருத்தங்கள், மாற்றங்களை அரசு செய்து கொள்ளலாம். 3 மாதத்துக்குள் அத்தகைய மாற்றங்களை செய்து, தேவைப்பட்டால் துணைப் பாட நூல்களைக் கூட மாணவர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்த நீதிமன்றம், வரும் 22-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட நூல்களை அங்கீகரித்துத் தமிழக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மே 22-ம் தேதி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களோடு சமச்சீர் கல்வி பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்த அரசு, பழைய பாடத் திட்ட நூல்களை அச்சடிக்க மறுநாளே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.

நிபுணர் குழு பரிந்துரைகள் எதுவுமின்றி சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்த அரசு அதற்காக சட்ட திருத்தமும் செய்துள்ளது., சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கும் வகையிலான இந்த சட்ட திருத்தத்தால் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படும்.

இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தி சிறப்பான இலக்கை எட்டும் நோக்கில் அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

* கல்வி பயிலும் பிள்ளைகள் நலன் காணாத இவள் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டார். இவ அதுக்கு சரிப்பட்டு வருவாளா ....?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!