சென்னை, ஜூலை: 30 தி.மு.க.வினர் நேற்று 29 ம் தேதி நடத்திய போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் பலியானான்.
சமச்சீர் கல்வி குறித்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனு விசாரணையில் இருக்கும் நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று (29.7.2011) போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க. அழைப்பு விடுத்ததோடு, வகுப்புகளை மாணவமாணவியர் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், திருவாரூர் மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை, 153 மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு சென்றனர், அவர்களும் அவர்களும் சில நொடியில் பள்ளியிலிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து, இவர்களில் சிலர் தங்கள் இல்லங்களுக்கு செல்வதற்காக வேளாங்கண்ணி தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் பயணித்ததாகவும், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் திருச்சியிலிருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது அரசுப் பேருந்து மோதி, அருகில் உள்ள சிறிய கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததாகவும், அதில் மாணவன் விஜய் மரணம் அடைந்தான் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
* தான் என்ற போக்கும் தான்தான் என்கிற அகங்காரமும் இருக்கும் வரை இவர் மாறவில்லை, மாறவும் மாட்டார்., திருந்தினால் மனிதன், திருந்தாவர் ....*
1 comments :
வணக்கம் சகோ துயர்தரும் ஒரு பகிர்வு அந்த
மாணவன் உயிர் அநியாயமாய் போய்விட்டது .
இதன் இழப்பும் வேதனையும் என்றுமே
அவனைப் பெற்றவர்களுக்குத்தான்.என்
செய்வது விதிய மாற்ற முடியாது என்பதே
என் கருத்து.பகிர்வுக்கு மிக்க நன்றி........
Post a Comment