Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 4, 2011

"நர" பலிக்கு சிறுவன் பலி, கோயிலை சூறையாடிய பொதுமக்கள் !

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜோதிபாசுநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் குணா என்ற குணசேகர் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வழக்கம் போல் டீயூசனுக்கு செல்வதாக கூறி சென்றான். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்தனர். டியூசன் ஆசிரியர் குணசேகர் டியூசனுக்கு வரவில்லை என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து குணசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தாளமுத்து நகர் போலீசில் வேல்ராஜ் புகார் செய்தார். போலீசாரும் வேல்ராஜை தேட ஆரம்பித்தனர்.

இந்தநிலையில் வேல்ராஜ் வீட்டின் அருகே உள்ள காளி கோவில் கிணற்றில் சிறுவன் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் குணசேகரின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது குணசேகர் என்பது தெரியவந்தது.

பின்னர் கிணற்றில் இருந்து உடல் மீட்கப்பட்டு பார்த்த போது குணசேகர் கையில் வெட்டுக்காயம் இருந்தது. இதனால் குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக கருதி அப்பகுதி பொதுமக்கள் காளி கோவிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் கோவிலுக்கு தீயும் வைத்தனர். . உடனே போலீசார் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வேல்ராஜ் நிர்வகித்து வரும் கருமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடந்தது. இது தொடர்பாக அவருக்கும், அவரது வீட்டருகே காளி கோவில் வைத்திருக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆறுமுகம், குணசேகரை நரபலி கொடுத்திருக்கலாம் என கருதி பொதுமக்கள் கோவிலை சூறையாடினர். காளி கோவில் நிர்வாகி ஆறுமுகம், அவரது மனைவி நாச்சியார், மகன்கள் லட்சுமணபாண்டியன்(வயது 20), ராமர்பாண்டியன்(20), திருமூர்த்தி(18) ஆகிய 5 பேரையும் சரமாரி தாக்கினர். உடனே போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிலை சூறையாடிய பொதுமக்களை போலீசார் தடுத்ததனர். எனினும் நிலைமை கட்டுக்குள் வராததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு 1மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு காரணமான ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். குணசேகர் சாவு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!