Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 4, 2011

ஆசியில் அனுமதி மறுப்பு! இந்தியருக்கு!?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓட்டலில், தலைப்பாகை கழற்ற மறுத்த இந்தியரை, ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுத்த விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியரிடம் மன்னிப்பு கேட்க ஓட்டல் நிர்வாகமும் முயற்சித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ளது, ராயல் இங்கிலீஷ் ஓட்டல். இந்த ஓட்டலுக்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஒருவர், தலைப்பாகை அணிந்து சென்றார். ஓட்டலின் வாசலில் காவலுக்கு நின்றவர், இவரை தடுத்து, தலைப்பாகையை கழற்ற வலியுறுத்தினார். இதற்கு இந்தியர் மறுக்கவே, ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் இடையே, பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த ஓட்டலின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பாதுகாப்புப் பணிக்கு வசதியாக தலைப்பாகையை கழற்ற வேண்டும் என்பது ஓட்டலின் கொள்கை. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், தலைப்பாகை அணிந்து வந்தவரை கழற்றும்படி வலியுறுத்தி இருக்கக் கூடாது. மன்னிப்பு கேட்பதற்காக, பாதிக்கப்பட்வரை தேடி வருகிறோம். ஓட்டலின் கொள்கையை சரியான முறையில் கையாள்வது பற்றி, காவலர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம்' என்றார்.ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி., ரேடியோவை தொடர்பு கொண்டு, ஒருவர், இப்புகாரை தெரிவித்த பின்னர் இச்சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, இந்திய வம்சாவளி மக்களுக்கான, உலக அமைப்புத் தலைவர் உமேஷ் சந்திரன் பிரிஸ்பேனில் கூறுகையில், "சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது என்பது மரியாதைக்குரியது. இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. போலீஸ் துறையில் தலைப்பாகைக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்படுகிறது. போலீஸ் பணியிலிருக்கும் இந்தியர் கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகிறது' என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!