Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 23, 2011

கல்லூரிக்கு மட்டம் போட்டு காதலை வளர்க்க களம் தேடும் காதலர்கள் !

கல்லூரிக்கு மட்டம் போடும் இளம் பெண்கள், அடிக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், தங்கள் காதலர்களுடன் மனம் விட்டு பேசவும் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தை தேர்வு செய்து அங்கே தங்களது காதலை மற்றவர்களும் பார்க்கும் வகையில் நடத்தி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் அமர்ந்துகொண்டு காதலை வளர்க்கின்றனர். சந்தேகப்பட்டு ரெயில்வே போலீசார் யாராவது அவர்களிடம் விசாரித்தால் நண்பர் ஒருவர் ரெயிலில் வருகிறார்.

அதற்காக காத்திருக்கிறோம் என்று கூறி விடுகின்றனர். அவர்கள் கையில் பிளாட்பார டிக்கெட்டுகள் இருப்பதால் மேற்கொண்டு அவர்களிடம் பேசாமல் போலீசாரும் சென்று விடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் காதலர்கள் ரெயில் நிலையத்திற்குள் ஆட்கள் குறைவாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தங்கள் செயல்பாட்டை தொடங்கி விடுகின்றனர்.

அத்துமீறும் காதலர்களை கண்காணிக்கும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இது குறித்து ரெயில்வே போலீசார் ஒருவர் கூறும்போது, பலதரப்பட்ட மக்கள் ரெயில் நிலையத்திற்கு வருகிறார்கள். கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் வருகிறார்கள்.

பள்ளி சீருடையில் வந்தால் நாங்களே பார்த்து எச்சரித்து அனுப்பி விடுவோம். ஆனால் வருபவர்கள் உறவினர்களா? என்பது எங்களுக்கு தெரியாது. நெருங்கி நெருங்கி பேசுவதை வைத்து சந்தேகப்பட்டு கேட்பது உண்டு. ஆனால் அப்படி எல்லோரிடமும் கேட்க முடியாது. இதெல்லாம் அவர்களாக பார்த்து திருந்த வேண்டிய விஷயம் என்றார் ஆதங்கத்துடன்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!