Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 19, 2011

பிரச்சினையில் முடிந்த விஜய் விழா ?

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன்., அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்", என்று ரசிகர்களை உற்சாகமூட்டி பேசினார்.

அவர் பேசி முடித்ததும், நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட ரசிகர்கள் பலரும் விஜய்யிடம் கை குலுக்க மேடையை நோக்கி முன்னேறினர். அப்போது ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் போலீசுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர்கள் சேர்களை தூக்கி போலீசார் மீது எறிந்தனர். சிறிது நேரம் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் மைக்கில் எச்சரித்த வண்ணம் ரசிகர்களை கட்டுப்படுத்திய பின்னர் பரபரப்பு அடங்கியது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!