Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 26, 2011

டெஸ்ட் தோல்வியால் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய வீரர்கள் !

லண்டன், ஜூலை 26 : லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பின் தங்கினர்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் படி, சச்சின் டெண்டுல்கர் இரண்டு இடங்கள் பின் தங்கி, 4வது இடத்தில் உள்ளார். 771 புள்ளிகள் பெற்ற விவிஎஸ் லட்சுமண் 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாட இயலாமல் போன வீரேந்திர சேவாக் 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதேநேரம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் போட்டியில் வலுக்கட்டாயமாக விளையாடிய ஜாஹிர் கான் அதே 5வது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் ஹர்பஜன் சிங் 4 இடங்கள் பின்தள்ளி ஸ்டீவர்ட் பிராடுடன் 11 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பிராட் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டு 5வது இடத்தைப் பிடித்தார். இவர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் 74 ரன்களும் 7 விக்கெட்களும் பெற்றதால் இந்த முன்னேற்றம்.

தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன் அதே முதல் இடத்தில் நீடிக்கிறார். 800 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டார்., முதல் இடத்தில் உள்ள ஜாக் காலிஸ்ஸைத் தொடர்ந்து இடம்பெற்றார் இங்கிலாந்தின் ஜோனாதன் ட்ராட்.

இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த கெவின் பீட்டர்சன் 14 இடங்கள் முன்னேறி ராகுல் டிராவிட்டுடன் 15வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். ராகுல் டிராவிட் மட்டும் முதல் இன்னிங்க்ஸில் அடித்த சதத்தைத் தொடர்ந்து ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்டு இந்த இடத்தைப் பிடித்தார்.

1 comments :

ராகுல் டிராவிட்டுக்கு ரசிகரின் பாராட்டு என்றும் உண்டு.. நன்றி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!