Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 12, 2011

சென்னையை புகழ்ந்து தள்ளும் ஹிலாரி கிளிண்டன் !

வாஷிங்டன், ஜூலை 12: வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார்.

தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று பொருளாதாரம், எரிசக்தி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சர் ராபர்ட் டி ஹோர்மட்ஸ் தெரிவித்தார். சென்னைக்கு வருவதற்கு தாம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார். 1960-ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவராக ஒரு மாதம் சென்னையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவு தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். கிழக்கு, மேற்கு மையம் மற்றும் அமெரிக்க வர்த்தக மையம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். சென்னைக்கு வரும் அவர், மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு செல்வார். மேலும் மிகவும் பிரபலமான மகாபலிபுரத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மகாபலிபுரத்துக்கு ஹிலாரி செல்லவில்லையெனில், தான் மட்டும் சென்று பார்க்க விரும்புவதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களால் இத்தகைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட ஹோர்மட்ஸ், இதை மேலும் அதிகரிக்க இப்போதைய பேச்சுவார்த்தை உதவும் என்று குறிப்பிட்டார். தில்லியிலும்,சென்னையிலும் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு வர்த்தகம் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ராணுவத்தை நவீனமயமாக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3,500 கோடி டாலர் அளவுக்கு ராணுவ நவீனமயமாக்கலுக்கு இந்தியா செலவிட உள்ளது. இதனால் ராணுவ ஆர்டர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்களுக்கு 800 கோடி டாலருக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!