Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 11, 2011

கேப்டனின் கேள்வி ? பதில் !!

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், தனியார் டி.வி.யில் நேயர்கள் இ மெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நேயர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி: லோக்பால் மசோதா குறித்து உள்கள் கருத்து என்ன?

பதில்: லோக்பால் மசோதாவை நான் வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில் தவறு இல்லை. பிரதமரை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவது தப்பு இல்லை.

கேள்வி: அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்துள்ளதால், உங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நீங்கள் வேதனையோடு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்: எங்கள் கட்சியின் அவைத்தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் முதல் முறையாக அ.தி.மு.க. அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே எங்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வேண்டாம்; கூட்டணி மந்திரி சபையிலும் இடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச போனார்கள்.

எங்களின் ஒரே எண்ணம் கருணாநிதி ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான். இதற்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றோம். மு.க.ஸ்டாலின் திடீர் என்று இப்படி ஒரு கருத்தை சொல்லுவார் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தினமும் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். இதற்கு ஒரு விடிவு கிடையாதா?

பதில்: இலங்கை அரசும், இந்திய அரசும் தேவை இல்லாமல் கவுரவம் பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன. மீனை யார் எங்குவேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று இரண்டு அரசும் பேசி முடிவு செய்தால் இந்த பிரச்சினையே ஏற்படாது என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!