Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 22, 2011

தன்னார்வத்தில் முன்னுரிமை கொடுக்கும் வெளிநாட்டவர்கள்

பந்தலூர் : "மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முன் வரவேண்டும்,' என்பதற்கு எடுத்துக்காட்டார் திகழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

பந்தலூர் அருகே ஏலமன்னா சி.டி.ஆர்.டி., நிறுவனம், மைசூர் ராலி நிறுவனம் ஆகியவை இணைந்து ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்களை கொண்டு, கிராமப்புற மக்களுக்கு கழிப்பிடம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி மேற்கொண்டன.

பொன்னானி பகுதியில் கழிப்பிட வசதியில்லாத, 11 பயனாளிகளை தேர்வு செய்து, கழிப்பிடம் கட்டி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும், பணி முடிந்து திரும்பும் தன்னார்வலர்களுக்கு பிரிவு உபசாரம், பாராட்டு விழா ஆகியவை பொன்னானியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஒவ்வொரு மனிதனும் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், நாட்டில் அமைதியும் அன்பும் பெருகும். அதில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது பாராட்டுக்குரியது,'' என்றார். தன்னார்வலர்களின் மேலாளர் ஷாலி பேசுகையில், ""ஏழை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதிலும், கிராமப்புற மக்கள் காட்டும் அன்பும் மறக்க இயலாது,'' என்றார்.

தலைமை வகித்த சி.டி.ஆர்.டி. துணை இயக்குநர் விஜயராஜூ பேசியது: நம்நாட்டு அரசு துறைகளுடன் இணைந்து ஏழை மக்கள், பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் பல பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், சுற்றுலா போல வந்த வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினீர்கள். கடந்த 17 நாட்களாக கடும் மழையிலும், கிராமப்புற மக்கள் உட்கொள்ளும் உணவுகளை உட்கொண்டு, தரையில் படுத்து உறங்கி தங்களது பணிகளை முடித்துக்கொடுத்த தன்னார்வலர்களின் பணிகளை பார்த்து நாமும் பிறர்க்கு உதவிடும் மனப்பாங்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!