தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது : கேள்வி: 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே?
பதில்: 2006 ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31 3 2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.
அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.
தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9 4 2011 அன்று சென்னையிலே கூறும்போது, "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார்., இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.
# இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டை ஊனம் ஆக்கப்போகிறார்கள், மாறி மாறி குற்றம் சொல்வதே பிழைப்பு ஆகி விட்டது. ஆட்சியாளர்களின் ஊழலும் நிர்வாக திறமை இன்மையே கரணம். மக்கள் ஏமாந்தால் தலையில் மிளகாய் கூட அரைத்து விட்டு அதிலும் ஊழல் பண்ணிவிடுவார்கள். #
0 comments :
Post a Comment