மோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். அந்த வகையில் அத்வானி, மோடி உள்ளிட்ட இந்துத்துவப் பரிவாரங்களின் அரசியல் என்பது இந்துக்களை ஏமாற்றி, அவர்களுடைய இறை நம்பிக்கையை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுண்டரில் கொலை செய்து வந்த மோடி, தன்னுடைய கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவாகி வந்த தன் அரசியல் எதிரியான முன்னால் உள்துறை அமைச்சர் ஹரேன் பந்த்யாவை கொலை செய்து விட்டு பழியை முஸ்லிம் இளைஞர்கள் மீது போட்டுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது .
மார்ச் 2003 இல் அகமதாபாத் லா கார்டன் பகுதியில் வைத்து ஹரேன் பந்த்யா சுட்டுக்கொல்லப்பட்டார் .இக்கொலை வழக்கில் ஹைதராபாத்தை சேர்ந்த அஸ்கர் அலி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டனர் .
ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல்பாய் ''தன் மகன் அரசியல் எதிரியான மோடியால் கொலை செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் குற்றம்சாட்டினார். அப்பொழுது மத்தியில் இருந்த BJP அரசு மோடியை காப்பாற்றியது.
2011 ம் ஆண்டு குஜராத் உயர் நீதி மன்றம் அஸ்கர் அலி உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்தது.
ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி விடுதலையான அஸ்கர் அலியை நேரில் சந்தித்து போது ''போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதையும் கண்டறிந்து ,தன் கணவரின் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் .
இந்நிலையில் சொராபுதீன் போலி என்கவுண்டர் கொலையில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒரு IPS அதிகாரி '' ஹரேன் பாண்டியா கொலை பற்றியும் யார் கொலை செய்ய சொன்னார்கள் என்பதை பற்றியும் சிபிஐ அதிகாரிகளிடத்தில் கூறியுள்ளார். இக்கொலை வழக்கில் மோடி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
@ குஜராத்தில் நடைபெறுவது அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கான அரசு மட்டுமே; வளர்ச்சி என்று சொல்லப்படுவது அவர்களுக்கான வளர்ச்சி மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் மருதையன். மோடியும் கூடாது, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆகியவற்றாலும் பலனில்லை என்றால் என்னதான் வழி? ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு. இரண்டாவது, புரட்சி. ‘மக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தால்தான் மாற்றம் சாத்தியம். புரட்சி என்பது நாமே தேர்ந்தெடுப்பதல்ல. அதைவிட்டால் வேறு வழியில்லை என்னும் நிலைக்கு நம்மை இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய சூழல்.’(பொய்யைப் பரப்பியே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்).
0 comments :
Post a Comment