Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 24, 2012

குரு குலத்தில் குமரிகளுடன் கும்மாளம்!!


ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர் பார்க்கக் கூடாதாம். மேலும் பெண்களை தனிமையிலும் சந்திக்கக் கூடாதாம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட ஆனந்த் சொரூப்தாஸ் உபதேசமெல்லாம் மக்களுக்குத்தாம் தனக்கு இல்லை என நிரூபித்துள்ளார்.

நேற்று இரவு ஆனந்த் சொரூப்தாஸ் ஒரு இளம் பெண்ணுடன் தனது அறையில் தனிமையில் இருப்பதாக மாள்வியா நகர் காவல் நிலையத்திற்கு ரமேஷ் பாய் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

சாமியாரின் கதவைத் தட்டி திறக்கச் செய்தனர். அப்போது உள்ளேயிருந்து தாஸும், 26 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் வெளியே வந்தனர். இருவரையும் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றபோது குருகுலத்து மாணவர்களும், சீடர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து சாமியாரையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சம்பந்தப்பட்ட பெண் கம்ப்யூட்டர் ஆசிரியையாம். குருகுலத்தில் பணியாற்றி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார், குருகுலத்தில் பியூனாக பணியாற்றி வரும் ஜிதேந்திர தொபாரியா என்பவரையும் கைது செய்தனர்.

சாமியார் மற்றும் மற்ற இருவர் மீதும் மக்களின் மத நம்பிக்கையை பாதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ் உள்ள லிங்(கம்)கை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள். முதல்வரின் கேடித்தனம்.
http://dinaex.blogspot.com/2012/11/blog-post_5.html

Reactions:

7 comments :

வணக்கம்

கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

யாழ் மஞ்சு

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, ரசாயன மருந்து செலுத்தி காயடிக்கும் சட்டம் தென் கொரியாவில் கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது., அதேபோல் கோயில் மந்திரம் சொல்லும் பார்ப்பன குருக்களுக்கும் காய் அடித்தால்தான் இதுபோன்ற சம்பவம் நிற்கும். ,..காசி.

அப்படியல்ல, முன்பு மாமிசம் திங்கமாடன்கள் இவா ( பார்பனன்) இப்ப இவாகள் துன்ன ஆரம்பிச்சதும் மாமிச விலை எகிர்சு அம்பி

சமயத்தின் பெயரால்,ஜதியின்பெய்ரால்,இனத்தின் பெயரால் மக்கள் ஏமாற்ரப்பட்டுவருகிறார்கல் அம்பலப்படுத்துங்கள்

Ugly fellows. The Sanyasi of Narayan Madam is a symbol of false rituals and traditional behavior. Realising god or self is a great thing. Sanyasi should have avoided girls.

வணக்கம் நண்பர்களே,

உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா.....? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!