Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 17, 2011

யு எஸ், ல் மெகா பரிசு பெற்ற இந்தியர்

நியூயார்க் : அமெரிக்காவில் முன்னணி சமையல்காரர்களுக்காக நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், இந்தியர் ஒருவர் உப்புமா தயாரித்து, 46 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். இப்பரிசை, புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

பொதுவாக உப்புமா என்றாலே பலரும் முகம் சுளிப்பர். பெண்களுக்கு எளிதாக வேலை முடிய வேண்டுமானால், உப்புமாவை கிண்டி வைத்து விடுவர். இந்த உப்புமாவையும், விரும்பி சமைத்தால், அதன் ருசியே தனி தான் என்பதை, அமெரிக்காவில் நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் நிரூபித்து, முதல் பரிசாக 46 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.அமெரிக்காவில் எளிதாக சமைக்கப்படும் உணவுக்கான போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த மேரி சூ மில்லிகென் வெற்றி பெற்று வந்தார். ஆனால், நடப்பாண்டில் நடந்த போட்டியில், அமெரிக்கா வாழ் மும்பையைச் சேர்ந்த இந்தியரான பிளாய்ட் கார்டோஸ், ரவை, காளான் கொண்டு உப்புமா தயாரித்தார். பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லை. ஆனால், "பிரவோ' சேனலில், இவர் தயாரித்த உப்புமாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்ட போது, இவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

கார்டோஸ் கூறுகையில், "நான் தயாரித்த உப்புமா தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த போது, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த உணவுக்கு பரிசு பெற முழு தகுதி பெற்றவன். நான் என்னுடைய உணவு தயாரிப்பு முறையை மாற்றிக்கொள்ள மாட்டேன்' என்றார்.

நடுவராக செயல்பட்டவரும், "சாவேர்' இதழின் தலைமை எடிட்டருமான ஜேம்ஸ் ஓஸ்லாந்து கூறுகையில், "மிகவும் திறமையாக, மறக்க முடியாத அளவிற்கு கார்டோஸ் உணவு தயாரித்து இருக்கிறார்' என, பாராட்டினார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்தார் என்பதால், பரிசுத் தொகையை இளம் விஞ்ஞானிகள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!