கொழும்பு, ஜூன் 11: இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க இலங்கை சென்றுள்ள இந்திய அதிகாரிகள், அந் நாட்டு அமைச்சருடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வியாழக்கிழமை சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைய இந்தியா தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி ஜெயலலிதாவிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பிறகு மேனன் தலைமையில் இந்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். அக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புத்துறை செயலர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள்.
அக்குழுவினர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெள்ளிக்கிழமை சந்தித்து இரு தரப்பு உறவு தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பேசினர் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்திய அதிகாரிகள் குழு சனிக்கிழமை சந்தித்துப் பேச உள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய, அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள்.
1 comments :
ராஜபக்சே கொலைகாரந்தான்.பிரபாகரனும் கொலைகாரந்தானே.ஏன் அவனைப் பற்றி சொல்வதில்.
Post a Comment