திருவனந்தபுரம்:கேரள மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை, தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பல்வேறு மோசடி நிதி நிறுவனங்களில், கேரள மாநில காவல் துறையைச் சேர்ந்த சிலர், பங்குதாரர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிதி முதலீடு சம்பந்தமான எந்த நிறுவனங்களையும் மறைமுகமாக நிர்வகிக்கவோ, பங்குதாரர்களாகவோ கூடாது என, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அவருக்கும் மேல் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை உடனடியாக தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் இடமாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, போலீஸ் சங்கத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றாலும் அதை அவர் நிராகரித்து விட்டார். போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.
1 comments :
ennaththa solla... pakirvukku vaalththukkal
Post a Comment