மதுபழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போய்கிறது. குறிப்பாக இப்போது பெண்களும் அதிகளவில் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மதுபழக்கத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு 25வயதுக்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.
இதுகுறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பவதாது, 18வயதில் ஒருவருக்கு ஓட்டுபோடும் உரிமை, திருமணம் செய்யும் உரிமை வந்துவிடுகிறது. அப்படி இருக்கையில் தண்ணியடிக்க மட்டும் 25வயசா...? என்ன ஒரு முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயாவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்தபிரச்சனை பூதாகரமாக வெடிக்கவும் அதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தனிமனிதன் ஒருவன் சுயமாக முடிவெடுக்க, அவனுக்கு முழுஅதிகாரமும் உண்டு. எந்த வயதில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று அவனுக்கு தெரியும். இதைத்தான் நான் கூறினேனே தவிர, மற்றபடி குடிபழக்கத்தை பற்றி நான் எதுவும் வாதம் செய்யவில்லை. இனி இதுபற்றி நான் எதுவும் பேசவிரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
2 comments :
thani manaitha urimai athu avanaiye paathikkum enraal urimaiyai parippathil thavarillai... pakirvukku nanri. vaalththukkal
Try to visit VALAISARAM
Post a Comment