புதுடில்லி : தன் மீதான 9 வழக்குகளிலிருந்து விடுவிக்க ரூ. 9 கோடி இழப்பீடாக தர பிரபல அரசியல் சாமியார் சந்திராசுவாமி சுப்ரீம் கோர்ட்டில் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும் அன்னியா செலவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதம் உள்ளிட்ட வழக்குகளுக்கு மூன்று மாத கால அவகாசம் கேட்ட அவரது வழக்கறிஞருக்கு சுப்ரீம் இருவாரங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளது.
மீண்டும் வரும் ஜூலை இரண்டாம் வாரம் விசாரணையை எடுத்துக்கொள்ளும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவை கலக்கிய பிரபல அரசியல் சாமியார் நெமிசாந்த் ஜெயின் என்ற சந்திராசுவாமி, இவர் டில்லியில் விஷ்வ தர்மாயனந்தா சான்ஸ்தா என்ற ஆசிரம் நடத்தி வருகிறார். கடந்த 1991-1996-ம் ஆண்டுகளி்ல பிரதமராக நரசிம்மராவ் ஆட்சியின் போது மிகுந்த செல்வாக்கு மிக்க அரசியல் சாமியாராக வலம் வந்தார்.
இவர் மீது செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கு, லக்குபாய் பதக் மோசடி வழக்கு ஆயுத புரோக்கராக செயல்பட்டது. அன்னிய செலவாணி மோசடி, வங்கியில் பண மோசடி உள்ளிட்ட 9 வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக சந்திராசுவாமி, அவரது உதவியாளர் விக்ரம்சிங் ஆகியோர் மீது கடந்த 1996-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்டிலும் வழக்கு நடந்து வந்தது. கடந்த 15ஆண்டுகளாக நடந்து வந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக , கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதன் கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. அப்போது அவரது அவரது வக்கீல் மனு தாக்கல்செய்துள்ளார். அதில் எல்லா வழக்குகளுக்கும் நஷ்ட ஈடாக ரூ. 9 கோடி தர உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக நான்கு வழக்குகளுக்கு ரூ. 25 லட்சம் காசோலை வழங்கப்பட்டது என்றார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விடுமுறை கால நீதிபதி பி.எஸ்.சவுகான், சுவதன்ந்தர்குமார் ஆகியோர் விசாரித்தனர். சந்திராசுவாமி சார்பில் , மூத்த வக்கீல் சி.எல்.பாண்டோ ஆஜரானார். அப்போது நீதிபதிகள் ரூ. 9 கோடியை எப்படி தர முடியும் என கேட்டனர். இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும், எனது கட்சிக்காராருக்கு(சந்திராசுவாமி) நிதி பிரச்னை அல்ல எனவும் கூறினார். இதற்கு நீதிபதிகள் இரு வாரம் கெடு விதிப்பதாகவும், வழக்கை ஜூலை இரண்டாம் வாரம் ஒத்தி வைத்தனர்.
0 comments :
Post a Comment