வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது அமைச்சர் பதவி காலம் முடியவுள்ள நிலையில் உலக வங்கியி்ன் தலைவராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அரசு நிர்வாகத்தில் வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார். இவர் அதிபர் ஒபாமாவை எதிர்த்து அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு முதல் துவங்குகிறது. இதில் தனது பதவிகாலத்தை முடிக்கவுள்ள ஹிலாரி கிளின்டன் ,கெளரமிக்க உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்வாங்க ஆலோசனை நடந்து வருவதாக ஹிலாரியின் செயலாளர் பிலிப்ரையினஸ் தெரிவித்தார்.
தற்போது உலக வங்கியில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டால் 2012-ம் ஆண்டு ஹிலாரி உலகவங்கியின் தலைவர் பதவியேற்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகவங்கியின் தற்போதைய தலைவராக ராபர்ட் ஜிலோயிக் உள்ளார்.
0 comments :
Post a Comment