Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 24, 2011

புலிகள்மேல் பொய் பிரச்சாரம் செய்யும், குண இரத்தின

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு முன்வரும் சகலரும் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதாக பேராசிரியர் ரொஹான் குணரத்தின குற்றம் சாட்டுகின்றார்.

உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி சில நாடுகளின் அரசியல்வாதிகளும் அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் நிதியுதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அது மட்டுமன்றி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சில அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகளின் நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். சிலர் அந்தப் பொறிக்குள் சிக்கியுள்ளனர்.

உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான போராட்டத்திலிருந்து இலங்கைக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய சரியான இராஜதந்திர பொறிமுறை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவில்லை.

புலிகளின் பிரச்சாரப் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதனை இலங்கை அரசியல் தலைமைத்துவங்கள் இன்னமும் தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அதற்காக காரணமாகும். போலியான தகவல்களின் மூலம் இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!