Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 24, 2011

உற்பத்தியில் உலக சாதனை படைக்கபோகுது! ஐ நா தகவல்

புதுடில்லி : நடப்பு 2011ல், உலகளவில் நெல் உற்பத்தி 71.30 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

சென்ற 2010ம் ஆண்டு, சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, 69.60 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. மேலும், நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவு, முந்தைய ஆண்டை விட, 1.8 சதவீதம் அதிகரித்து, 46.40 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டு, இந்த சாதனை முறியடிக்கப்படும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பருவ நிலை சாதகமாக உள்ளதால், சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, சென்ற ஆண்டை விட, 2.5 சதவீதம் அதிகரித்து, 71.13 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும், 47.60 டன் என்ற அளவில் அதிகரிக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது.ஆசிய அளவில் நெல் உற்பத்தி 2.5 சதவீதம் உயர்ந்து, 64.50 கோடி டன் என்ற அளவை எட்டும். நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும் 43 கோடி டன்னாக உயரும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, நடப்பு 2010-11ம் பருவத்தில், நெல் அரவைக்கு பிறகு கிடைக்கும்,அரிசியின் அளவு அரிசி உற்பத்தி 9.41 கோடி டன்னாக இருக்கும் என,மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையின் நெல் உற்பத்தி குறையும். நிலநடுக்கம், ”னாமி தாக்குதல், அணு உலை கசிவு உள்ளிட்டவற்றால் ஜப்பானிலும் நெல் உற்பத்தி சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில், ”னாமி தாக்குதலால் டொஹொகு மாவட்டத்தில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 43 ஆயிரம் எக்டேர் பயிர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜப்பானில் நெல் உற்பத்தி 3 சதவீதம் குறைந்து, ஒரு கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் நடப்பாண்டு நெல் உற்பத்தி, கடந்தாண்டு போலவே இருக்கும். மேற்கு ஆப்ரிக்காவில் நெல் உற்பத்தி உயரும் என்ற போதிலும், எகிப்து, மடகாஸ்கர் நாடுகளில் நெல் உற்பத்தி குறையும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.கடந்தாண்டு லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் குறைந்திருந்த நெல் உற்பத்தி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, உருகுவே, வெனி”லா நாடுகளில் நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!