கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசுக்கு புகார் அளித்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
மேலும், கூடுதல் கட்டணம் தொடர்பாக முதல்வரின் புகார் பிரிவுக்கு மனு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஜெயலலிதா, பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எந்தப் பெற்றோரும் இதுவரை அரசுக்கு புகார் அளிக்கவில்லை. பெற்றோர்களானாலும், பள்ளிகளானாலும் கட்டணம் குறித்து அரசுக்கு மனு கொடுத்தால் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
பெற்றோர்கள் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பள்ளிகள் உணர்ந்தாலோ, பெற்றோர்கள் அப்படி நினைத்தாலோ போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக அவர்கள் அரசை அணுகலாம். அரசு தலையிட்டு அதை தீர்த்து வைக்க வேண்டுமென்று மனு கொடுத்தால் நிச்சயமாக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கும்.
புகார் பிரிவுக்கு மனு: பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் முதல்வரின் பெயரில் உள்ள தனிப் பிரிவுக்கு புகார் தெரிவிக்கலாம். அதற்கு தங்களுடைய புகார் கடிதத்தை அனுப்பினாலே போதும். கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.
1 comments :
அம்மா.....அவசியம் கல்வி கொள்ளையர்களை கைது செய்யுங்கள்..
Post a Comment